IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருச்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

0 22

தீபாவளி தினம் நெருங்கி வரும் சூழ்நிலையில் திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கைப்பற்றியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று மாலை துவங்கி மணி அளவில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அலுவலகர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என அனைவரிடமும் சுமார் 30 நிமிடம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை போலீசார் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீபாவளியை ஒட்டி அன்பளிப்பு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் கொடுத்திருக்கலாம் என்று இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.