IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

முள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை! திருச்சியில் பயங்கரம்

Get real time updates directly on you device, subscribe now.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அதவத்தூர் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி (வயது 14) முள்ளுக்காட்டில் எரித்துக்கொலை செய்யப்பட்டார். சோமரசம் பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையை அடுத்துள்ள – அதவத்தூர் பாளையம் பகுதியில் வசித்து வரும் பெரியசாமி மகேஸ்வரி தம்பதியினரின் 2வது மகள் கங்காதேவி (14). இந்த சிறுமி அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் இருந்து குப்பை கொட்டுவதற்காக வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் கங்காதேவி வீடு திரும்பாததால் தந்தை பெரியசாமியும் தாய் மகேஸ்வரியும் தேடிவந்தனர். இந்நிலையில் முள்ளிகரும்பூர் பழைய பாலம் பகுதிக்கு மாணவி சென்றதாக கூறப்பட்ட நிலையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் கிடந்துள்ளது.

கங்காதேவியின் ஆடையை வைத்து அடையாளம் கண்டு பெற்றோர் இது குறித்து சோமரசன்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்துக்கு அருகே தீப்பெட்டி, மண்ணெண்ணெய் கேன் போன்றவைகளும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற டி.ஐ.ஜி ஆனிவிஜயா, எஸ்பி ஜியாவுல்ஹக் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டது. அங்கு கூடிய பொதுமக்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரியாத நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டபகலில் நடந்த இந்த சம்பவத்திற்கு காரணம் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் அந்த சமயத்தில் நடமாடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை ஏம்பல் கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் திருச்சியில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader