IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அரைக்கிலோவிற்கு மேல் வளரும் மர வெங்காயம்

Get real time updates directly on you device, subscribe now.

வெங்காய விலை உயர்வால் நமக்கு நாடு வெங்காயத்தை தவிர்த்து எகிப்து வெங்காயம் உள்ளிட்ட சில வெளிநாட்டு வெங்காய வகைகளையும் அறியும் சூழலை உருவாக்கி உள்ளது. சந்தைக்கு வந்த எகிப்து வெங்காயம், அளவில் பெரியதாக இருந்தாலும், சுவை வித்தியாசமாகத் தெரிந்தாலும் அது நமது மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

எகிப்து வெங்காயம் எனப்படும் மர வெங்காயம் உலக அளவில் புகழ் பெற்ற வெங்காய இனங்களில் ஒன்றாகும். இதில் பல சிறப்பு குணங்கள் இருகின்றனர். இதன் பிரபலமான பெயர்கள் மர வெங்காயம், நடக்கும் வெங்காயம் ஆகும்.

வெங்காயம் நம் நாட்டில் செடியில் விலையும், ஆனால் எகிப்து வெங்காயம் நமது நாட்டு வெங்காயத்திலிருந்து வேறுபட்டதாகும். அது வேர்ப்பகுதியில் காய்பிடித்து வளர்வதில்லை. எகிப்து வெங்காத் தண்டு கொஞ்சம் உறுதியாக இருக்கும். அதன் உச்சியில் தான் வெங்காயம் கொத்தாக காய்க்கும். அதனால் இதை மர வெங்காயம் என்று அழைப்பதுண்டு.

அதே நேரத்தில் வெங்காயம் நன்றாக விளைந்துவிட்டால் அதன் எடையைத் தாங்க முடியாமல் தண்டு வளைந்து தரையைத் தொடும். அப்போது வேங்காயம் மீண்டும் தரையில் பதிந்து புதிய வெங்காய செடி போல வளர்ந்து மீண்டும் காய் காய்க்கும். இப்படி அவை இடம் பெயர்ந்து கொண்டே செல்வதால் நடக்கும் வெங்காயம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலியம் சீபா, பல்பிங் ஆனியன், பஞ்சிங் ஆனியன், ஆல்லியம் பிஸ்ட்லோசம் போன்ற 4 வகை வெங்காயங்களின் கலப்பினத்தால் எகிப்து வெங்காயம் உருவாக்கப்பட்டது. இது நாம் பயன்படுத்தும் பெங்களூரு பெல்வாரி வெங்காயத்தை விட சற்று பெரிதாக விளையும். அதிகபட்சம் அரைக்கிலோவுக்கு மேல் வளரும் வெங்காயங்களும் உண்டு.

#Egypt #onion #tree

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader