சென்னை மெட்ரோ ரயில் குறித்து நடிகர் ஆர்யா தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகர மக்களின் பயணத்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றியமைத்ததில் சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு முக்கிய பங்கு உண்டு. மெட்ரோ ரயிலில் மிகவும் சுத்தமான ரயில் நிலையங்கள், ரயில்கள் என வேலைக்கு செல்பவர்கள் விரும்பி பயணிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மெட்ரோ ரயில் மீண்டும் தனது ரயில் சேவையை தொடங்கியுள்ளது. நடிகர் ஆர்யா இதற்கு முன்பு மெட்ரோ ரயில் சேவையை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். அவரது வீட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு செல்ல மெட்ரோவில் தான் பயணிப்பார்.

நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மெட்ரோவில் பயணித்துள்ளார். “கோவிட்டிற்குப் பிறகு முதல் முறையாக சென்னை மெட்ரோவில் பயணம். பாதுகாப்பாகவும், நல்ல சுத்தமாகவும் வைத்திருக்கிறார்கள். ‘அரண்மனை 3’ படத்தின் படப்பிடிப்பு,” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக மெட்ரோவில் பயணிக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More