IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

#இந்திதெரியாதுபோடா – தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சிக்கு டிராய் கண்டனம்

Get real time updates directly on you device, subscribe now.

தனியார் டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு மத்திய அரசு மற்றும் ட்ராய் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, அந்த நிகழ்ச்சி அந்த டிவியின் யுடியூப் தளத்தில் இருந்து அகற்றப்பட்டது.

தனியார் டிவியில் கடந்த ஞாயிறு இரவு ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் என்ற பெயரில் ஒருவர் பங்கேற்றார். தி.மு.க எம்.பி., கனிமொழி தயாரித்து கொடுத்த சிகப்பு டி – ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். “அந்த டி -ஷர்ட்டில் இந்தி தெரியாது போடா” – என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர் என்று கூறிக்கொண்டு கனிமொழி தயாரித்து கொடுத்த டிஷர்ட்டை அணிந்துக் கொண்டு கலந்துக் கொண்டது மத்திய அரசு கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து மத்திய அரசு, டிராய் அமைப்பு மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் டிவி நிர்வாகத்தை எச்சரித்தனர். இதையடுத்து ஞாயிறு அன்று ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியை யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இனிமேல் ராதாகிருஷ்ணனை நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader