பீகாருக்கு மட்டும் தான் இலவச தடுப்பூசியா…? தேர்தல் அறிக்கையை சாடிய உத்தவ் தாக்கரே

Get real time updates directly on you device, subscribe now.

பீகாருக்கு மட்டும் தான் கொரேனா இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்றால் மற்ற மாநிலங்கள் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டுமா என பாஜகவின் தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே சாடினார்.

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை மாநகர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய அளவில் பொதுமக்களை கூட்டி சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே பேரணி நடந்தது. தரசா பேரணியில் சிவசேனா கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

பேரணியில் அவர் பேசியதாவது, மகாராஷ்டிராவில் எனது அரசு பொறுப்பேற்று ஒரு வருடங்கள் நிறைவுற்றது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போது எனது அரசு கவிழ்ந்து விடும் என்றனர். நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன். முடிந்தால் எனது ஆட்சியே கவிழ்த்து பாருங்கள்.

முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை (மோடிக்கு மாற்று) என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்றார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More