திரைப்பிரபலங்கள் சம்பளத்தை உயர்த்த மேற்கொள்ளும் டிரிக்ஸ்!

Get real time updates directly on you device, subscribe now.

தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் ஆகிவிட்டது. தமன்னா மற்ற மொழிப்படங்களில் பிசியாகி விட்டார். அனுஷ்கா தமிழ் படங்களில் நடிப்பதையை குறைத்து விட்டார். மற்ற நடிகைகள் அனைவரும் மற்ற மொழிப்படங்களில் பிசியாகி விட்டனர். அப்படியே ஒரு சில அறிமுக நடிகைகள் வந்தாலும் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மனம் வரவில்லை போல.

இந்த சமயத்தைப் பயன்படுத்தி தான் முன்னணி நடிகைகளில் வலம் வருபவர்கள் தங்களது சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுகிறார்கள். ஆம்

தற்போது நயன்தாரா தனது சம்பளத்தை பத்து கோடியாக உயர்த்தி விட்டாராம். இங்கு ஹீரோயின்கள் இல்லாதது மட்டுமா சம்பள உயர்வுக்கு காரணம்? அதுவும் ஒரு காரணம் தான். ஆனால் அதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி படைப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். படம் வித்தியாசமான ஜேர்னலில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் பெரும் லாபத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அதனாலே கிடுகிடுவென தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் லேடி சூப்பர் ஸ்டார்.

எப்போது எல்லாம் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்றால், ஒரு படம் எதிர்பார்க்காத ஹிட் கொடுத்தால் அல்லது படத்தின் வரவு ஏகபோகமாக வரவேற்பு இருந்தால் தனது அடுத்த படத்தில் சம்பளத்தை கண்டபடி உயர்த்திவிடுவார்கள். அதே பாணியில்தான் நயனும் சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

மூக்குத்தி அம்மன் நயன்தாராவிற்கு பெரிய வரத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மூக்குத்தி அம்மன் ஓடிடியில் வெளியானதற்கே நயன்தாரா சம்பளத்தை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டார். இறுதியாக அவர்களது சம்பள உயர்வை ஈடுசெய்ய ஓடிடி சந்தாவை உயர்த்தாமல் இருந்தால் சரி. ஏனெனில் எல்லாவற்றிற்கும் சேர்த்து விலையை ஏற்றுவது என்னவோ சராசரி ரசிகனின் தலையின் மேல் தான்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More