IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

63

தமிழகத்தில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல், இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதற்காக. போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த தொடர் நடவடிக்கை எதிரொலியாக 1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. இருப்பினும், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் தமிழகத்தில் சுத்தமாக வரக்கூடாது என்பதற்காக தொடர்ந்து ஆண்டிற்கு இருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான முதல் முகாம் நாளை (ஞாயிறு) தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை போலியோ சொட்டு மருந்து கொடுக்க முடியாவிட்டால், அடுத்தடுத்த நாட்களில், களப் பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று சொட்டு மருந்து கொடுப்பார்கள் எனவும், பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து முகாமை பயன்படுத்தி பயனடையுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.