IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தக்காளி சாத மிக்ஸ்

92


தேவையான பொருட்கள் :


பழுத்த தக்காளி – 10, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு – 2 ஸ்பூன், கறிவேப்பிலை – தேவைக்கேற்ப, எண்ணெய் – தேவைக்கேற்ப.


இப்படித்தான் செய்யணும் :

  • தக்காளியை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 5நிமிடம் கொதிக்க வைத்து ஆறியதும் தோல் நீக்கி, மிக்சியில் அரைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.

  • மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  • எண்ணெய் வரத் தொடங்கியதும் இறக்கி சேமித்து வைக்கவும்.

  • இந்த மிக்ஸை ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது சாதத்தை உதிராக வடித்து தக்காளி மிக்ஸை கலந்து சாப்பிடலாம்.


#Tomato #Rice #Mix