IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தெங்கானாவில் இரண்டு ரயில் நேருக்கு நேர் மோதல்

Get real time updates directly on you device, subscribe now.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதின. ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் இன்று காலை 11.45 மணியளவில் ஒரு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து நின்று கொண்டிருந்தது. ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டும், ஏறிக் கொண்டும் இருந்தனர். அப்போது உள்ளுர் ரயிலான மின்சார ரயில் ஒன்று நடைமேடைக்கு வேகமாக வந்து, நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது.

ரயில் நிலையத்தில் என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்குள் இரண்டு ரயில்களும் ஒன்றோடன்று வேகமாக மோதிக் கொண்டன. இதில் இரண்டு ரயில்களின் 8 பெட்டிகள் நொறுங்கின. ரயில் மோதியதை அடுத்து பயணிகள் அனைவரும் அலறினர். இதையடுத்து ரயில் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.

முதல்கட்ட தகவலின் படி 30 பேருக்கு பலத்த காயடைந்துள்ளதாக தகவல் தெரிய வருகிறது. மேலும் ரயில் பெட்டி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நடந்ததாக தெரிய வருகிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader