IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஏற்றம், இறக்கம் காணும் தங்கம் விலை

Get real time updates directly on you device, subscribe now.

 

சென்னையில் கடந்த சில தினங்களான தங்கத்தின் விலை ஏறி. இறங்கி வருகிறது. நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை இன்று குறைந்து சவரனுக்கு ரூ.30,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. அதன் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த ஜன.2ந்தேதி விலை உயர்ந்து சவரனுக்கு ரூ.30,344 ஆக விற்பனையானது.

அதன்பிறகு ஜன.6ந்தேதி மீண்டும் தங்கம் விலை அதிரடியாக அதிகரிக்து சவரனுக்கு ரூ.31,168 ஆக விற்பனையானது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மறுநாள் (ஜன.7ந்தேதி) தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு சவரனுக்கு ரூ.30,744 ஆக விற்பனையானது. இதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் உயர்ந்து ரூ.31,422 ஆக விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து, சவரனுக்கு ரூ.30,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.67 குறைந்து, ரூ.3,830க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் சில்லறை விற்பனையில் ரூ.1.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் காரணமாக இவ்வாறு கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலையானது ஏற்றம், இறக்கம் காணப்படுவதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#gold #rate Today #jan09 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader