தமிழக முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்த திரைப்பிரபலங்கள்

Get real time updates directly on you device, subscribe now.

தமிழக முதல்வர் பழனிச்சாமியில் தாயார் சமீபத்தில் காலமானதை அடுத்து முதல்வரின் வீட்டிற்கு சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள பலரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

இருதினங்களுக்கு முன் முதல்வர் பழனிச்சாமி சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பியதை அடுத்து, நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் மற்றும் பலர் முதல்வரை சந்தித்து ஆறுதல் கூறினர். முதல்வரின் தாயார் திருவுருவ படத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் முதல்வரின் தாயார் மறைவையொட்டி நடிகர் எஸ்.வி.சேகர், மற்றும் நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா இன்று முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள். மேலும் விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன், தேமுதிக கட்சி எல்.கே.சுரேஷ் ஆகியோர் முதல்வரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

#cinemacelebrity #meetcm #cmot #in4net

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More