IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வோட்காவிற்கு பதிலாக சானிடைஸர்கள்! – மதுபான கம்பெனி எடுத்த அதிரடி முடிவு

Get real time updates directly on you device, subscribe now.

சீனாவிலிருந்து பரவிய கொரனோ வைரஸ் நாடுமுழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுக்க கொரனோவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கென்று திணறி வருகின்றன.

தற்போது சீனாவில் கொரனோவைத் தொடர்ந்து ஹாண்டா என்னும் கொடிய வைரஸால் தாக்கி ஒரு பலியான சம்பவம் நாம் அனைவரையும் உருக்குலைய செய்துள்ளது. ஏற்கனவே 16000 உயிர்களை பறித்த கொரோனா இன்னும் பல உயிர்களை சூறையாட காத்திருக்கிறது.

இந்நிலையில் பிரபல தொழிற்சாலைகள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதன் வரிசையில் அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல வோட்கா மதுபான கம்பெனியான டிட்டோஸ் 24 டன் எடையுள்ள ஹாண்ட் சானிடைஸர்களை உற்பத்தி செய்யப்போவதாக அவர்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிப்பு இன்னும் குறையாதபட்சத்தில் எங்களது வோட்கா கம்பெனியில் வோட்கா தயாரிப்பதை இரண்டு வாரங்கள் நிறுத்திவைக்கப்பட்டு அந்நேரத்தில் மக்களுக்கு தேவையான ஹாண்ட் சானிடைஸர்களை தயாரிக்க முன்வந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் டெக்சாஸ் மக்கள் அனைவருக்கும் இவை வந்து சேரும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader