IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருவாரூர் மாணவி விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை

87


மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.


திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி மகள் மைதிலி. இவர் பி.எஸ்.சி , பி.எட், பட்டப்படிப்பில் 2 ஆம் ஆண்டு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். இரவு விடுதியில் உணவு சாப்பிட மைதிலி வரவிலலை.


இதை அடுத்து சக மாணவிகள் சாப்பிட அழைப்பதற்காக மைதிலியின் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மைதிலி விடுதியின் அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைகழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மைதிலி தற்கொலை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர். அவர்களிடம் மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


#Tiruvarur #student #hostel #Suicide