IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

லலிதா ஜுவல்லரியில் திருடிய கொள்ளையர்கள் எப்படி திருவாரூரில் சிக்கினர் ! திடுக்கிடும் பின்னணி தகவல்

Get real time updates directly on you device, subscribe now.


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் இருதினங்களுக்கு முன் கடையின் பின்புறத்தில் உள்ள சுவற்றை துளையிட்டு முகமூடி அணிந்து இரண்டு பேர் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வந்தது.


இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை டைமண்ட் விடுதியில் 6 வடமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து புதுக்கோட்டை விரைந்து சென்ற போலீசார் 5 பேரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அதில் ஒருவர் மட்டும் போலீசாருக்கு பயந்து தப்பி ஓட முயற்சி செய்ததில் பலத்த காயமடைந்தார். அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் கைது


இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட்டான். உடனே வாகனத்தை ஓட்டி வந்த மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கநகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது அந்த நகைகள் அனைத்தும் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது என தெரியவந்தது.
பாவம்யா அந்த லலிதா ஓணர்! 


இதையடுத்து பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், ஆற்றங்கரை வழியாக தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இதனிடையே தப்பி ஓடிய சுரேஷ், பிரபல ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் அந்த இடத்தில் மட்டும் எப்படி துளையிட்டு கொள்ளையடிக்க முடிந்தது ? 


மேலும் மீதமுள்ள நகைகளை சீராத்தோப்பில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறியதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டுள்ளளனர். போலீசாரிடம் பிடிபட்ட மணிகண்டன், கொள்ளையடிக்கப்பட்டதில் தன் பங்கை மட்டும் பெற்றுக்கொண்டு வந்ததாக போலீசார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.


மேலும் புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்கள் 6 பேர் தங்கிய அறைகளில் இருந்து 7 பைகள் பறிமுதல் செய்யப்பட்டதும் திருச்சி நகைக்கடை கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட பைகள் போல் இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். மேலும் இவர்கள் திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்தவர்களின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#LalithaJewellery #Robbery #PoliceArrest #In4Net

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader