IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் திமுகவிற்கு பட்டை நாமம் – பிரேமலதா ஆரூடம்

11


திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேமுதிக முப்பெரும்விழாவில் பொதுச்செயலாளர் பிரேமலதா பேசும்போது, அண்ணா பிறந்தநாள் விழாவில் திமுகவிற்கு பட்டைநாமம் போடுவது உறுதி என்று பேசியுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சி தொடங்கி 15ம் ஆண்டு விழா, ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கும் நலத்திட்டம் விழா ஆகிய மும்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள நட்சத்திர ஓட்டல் மைதானத்தில் நடந்தது. விழாவில் தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா பேசுகையில், இந்த கூட்டத்தை சுற்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு திருப்பூர் போலீசார் மிகவும் கடுமையாக செயல்பட்டனர்.


பேனர் வைக்கக்கூடாது என்பதை தேமுதிக கட்சி அதை ஏற்கும். இங்கு வைத்துள்ள பேனர்கள் தொண்டர்களின் வியர்வையில் வந்தது. இது முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி. சாலையில் வீசப்பட்ட பேனர்களால் தொண்டர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.


தேமுதிகவின் கோரிக்கை தாய்மொழியை காப்போம், அனைத்து மொழியையும் கற்போம் என்பதே . தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொலை குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள். நீதிமன்ற நீபதிகள் இதை கவனிக்க வேண்டும் என்பதே தேமுதிக கோரிக்கை வைக்கிறது. நெசவும் பின்னலாடை தொழில் ஜி.எஸ்.டியால் நலிவடைந்து வருவதை அனுமதிக்க மாட்டோம். இதுகுறித்து பிரதமரை சந்தித்து தொழில் வளம்பெற திட்டங்கள் குறித்து அறிவிக்க தேமுதிக வலியுறுத்தும்.


கலாச்சாரம் 100 நாட்கள் ஆட்சி செய்த மத்திய அரசு என்ன செய்தது என கேள்வி கேட்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி 100 ஆண்டுகள் ஆட்சி செய்ததில் என்ன செய்தார்களாம் ? உப்பு திண்றால் நிச்சயம் தண்ணீர் குடித்தாக வேண்டும். தப்பு செய்த சிதம்பரம் தற்போது ஜாமீன் தேடி அலைகிறார். நீண்ட தூக்கத்தில் இருந்து தற்போது தான் முழித்திருக்கிறார்.


பேனர் கலாச்சாரத்தை துவக்கியதே திமுக தான். ஆனால் தற்போது அதிமுக பேனர் விழுந்ததும் இனி பேனர் வைக்கும் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று ஸ்டாலின் கூறி வருகிறார். தேமுதிக கட்சி துவங்கியபின் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. இனியும் வரமுடியாது. கட்சியினரின் பணத்தை காக்கவே பேனர் வைக்க வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீங்களே நல்ல முன் உதாரணமாக இல்லாவி்ட்டால் உங்களின் அறிவுரையை யார் கேட்பார்கள்?


எதிர்கட்சி தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று வரலாறு படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். ஸ்டாலின் முதலில் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். தேமுதிக முப்பெரும்விழா அறிவித்த உடனே அதை பார்த்து காப்பியடிக்கும் விதமாக திருவண்ணாமலையில் திமுக முப்பெரும்விழா நடத்துகிறது. தடைசெய்யப்பட வேண்டிய கட்சியாக திமுக உள்ளது.


இந்திய இறையான்மைக்கு எதிராக பேசும் கட்சி திமுக. சிதம்பரத்தை கைது செய்துவிட்டார்கள். என்.ஐ.ஏ விவகாரத்தில் தாமும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி ஸ்டாலின் அடக்கி வாசிக்கிறார். அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா தருணத்தில் திமுகவிற்கு பட்டை நாமம் போடும் நாள். அர்ஜுனராக கிருஷ்ணராக இருந்து தமிழ்நாட்டை காப்பவர் நமது கேப்டன். கர்ணனாக தர்மராக நமது தர்மபிரபுவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என்றார்.
#PremalathaVijayakanth #Tiruppur #DMDK #In4Net