IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அண்டவெளி அதிசயங்களை அறிய ஓர் அரிய வாய்ப்பு! புஷ்கரம் மற்றும் ஜிடிஎன் கல்லூரி இணைந்து நடத்தும் இணையக் கருத்தரங்கு

Get real time updates directly on you device, subscribe now.

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரி, தமிழ்நாடு கல்வியாளர்கள் சங்கமம், IN4NET இணையதளம் ஆகியவை இணைந்து நடத்தும் விண்வெளி அறிவியல் குறித்து வியப்பூட்டும் தகவல்களோடு இணைய வழியில் ஓர் இமாலய கருத்தரங்கு வருகிற 30ம்தேதி (புதன் கிழமை) நடைபெறுகிறது. அண்டவெளி அதிசயங்களை அறியும் வகையில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்தரங்கில் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் வருகிற 30ம்தேதி “Time Machines in the Sky” and “Travel in Venus Planet” என்ற தலைப்பில் இணையக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் , “வானமே எல்லை (அண்டவெளி அதிசயம்) வானை அளப்போம்” என்ற தலைப்பில் பேசுகிறார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் “Time Machines in the Sky” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். திருச்சி அண்ணா அறிவியல் மையம் – கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் ஆர்.அகிலன் “Travel in Venus Planet” என்ற தலைப்பில் பேசுகிறார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. பங்கேற்கும் அனைவருக்கும் இ-சர்டிபிகேட் வழங்கப்படும். கருத்தரங்கில் பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/i6MirhVuatMJxAXP9 என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

ஜூம் செயலி மூலம் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்கான லிங்க் : https://us02web.zoom.us/j/87308377772?pwd=eUZ1NFRMaFdwQjFYYUg3QmdCRDJ2dz09
மீட்டிங் ஐடி : 873 0837 7772 பாஸ்கோடு : 465586

கருத்தரங்கம் குறித்தும், கருத்தரங்கில் பங்கேற்பது குறித்தும் மேலும் விபரங்களை அறிந்து கொள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ராமஜெயம் (துணை பேராசிரியர் – புள்ளியியல்) 9943228183, என்.திவ்ய பாரதி (துணை பேராசிரியர் – கம்ப்யூட்டர் சயின்ஸ் ) 9025143170 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை புஸ்கரம் வேளாண் கல்லூரி, திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரி, கல்வியாளர்கள் சங்கமம், IN4NET இணையதளம் ஆகியவை இணைந்து செய்து வருகின்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader