IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட திலேப்பியா மீன்களை வளர்க்க பொதுமக்கள் ஆர்வம்

15


மரபணு மேம்படுத்தப்பட்ட அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட திலேப்பியா மீன்களை விவசாயிகள் பண்ணைகளில் வளர்த்து அதிக இலாபம் ஈட்டலாம் என கலெக்டர் ராஜசேகர் தெரிவித்தார்.


மதுரை மாவட்ட கலெக்டர் ராஜசேகர் திலேப்பியா மீன்கள் குறித்து கூறியதாவது, குறைந்த பரப்பளவு இடங்களில் அதிகளவு எண்ணிக்கையில் இருப்பு செய்து இவ்வகை மீன்களை வளர்க்கலாம். மேலும் வாங்கி விற்பனைசெய்வோர்களும் இவ்வகை மீன்கள் பண்ணைகளில் அதிகம் வளர்க்கும் போது வேகமாக வளரும். நீரின் அமிலகார தன்மை ஏற்ற தாழ்வுகளையும் அதிகளவு எதிர்கொண்டு வேகமாக வளரும் என்றார்.


மேலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன் இனக்குஞ்சுகள் கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணையில் ஆண்டு முழுவதும் இந்த மீன்கள் விற்பனைக்குள்ளது. மதுரை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பிறகு இம்மீன்களை யாருவேண்டுமானாலும் வளர்க்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மீன் வள உதவி இயக்குனர் அலுவலகம், பேச்சியம்மன் படித்துறை, மதுரை-625 001. தொடர்புக்கு 0452-234 7200 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.