IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டிக்டாக் வீடியோ செய்வதற்கு தடை சொன்னதால் இளம்பெண் தற்கொலை

116


டிக்டாக்கில் முழ்கிய இளம்பெண்ணிடம் குடும்பத்தை கவனிக்க சொல்லி வீடியோ எடுப்பதை கணவன் கண்டித்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அய்யம்மாள்(30). இவர்களுக்கு திருமணமாகி 61/2 ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

ராஜேந்திரனின் மனைவி அய்யம்மாளுக்கு செல்போனில் டிக்டாக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை சரிவர கவனிக்காததால் கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் கணவன் – மனைவிக்கு இடையே சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரியம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து 25ம் தேதி மீண்டும் பல்லடம் புறப்பட்டு சென்றார்.

பல்லடம் வீட்டிற்கு வந்த அய்யம்மாள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன், எதற்காக வாந்தி எடுக்கிறாய் என்று அய்யம்மாளிடம் கேட்டுள்ளார். அப்போது டிக்டாக் சம்பந்தமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என்றார். உடனே அதிர்ந்த ராஜேந்திரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி கொடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் அய்யம்மாள் தற்கொலை குறித்து பல்லடம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

பொழுதுபோக்கிற்காக சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் காலம் போய் அற்ப சந்தோஷம் தரும் டிக்டாக்கிற்காக தனது குடும்பத்தையே இழக்கும் நிலைக்கு குடும்பத்து பெண்கள் அடிமையாகிவிட்டனர் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.