IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

71ஆவது குடியரசு நாளை கொண்டாடும் டிக் டாக்

349

 

ஜன்பத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில் பங்கேற்ற பள்ளிக் குழந்தைகள் வழக்கமாக நாடு முழுவதும் குடியரசு தினத்தன்று நடைபெறும் தேச பக்திப் பாடல்கள், கொடி ஏற்றுதல் உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் மூலம் அத்திருநாள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

நடப்பு ஆண்டு டிக்டாக் சமூகமும் இந்தியாவின் 71ஆவது குடியரசு நாள் கொண்டாட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டது. குறு வடிவு கைபேசி காணொலியில் முன்னிலை வகிக்கும் டிக்டாக் இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், #தேஷ்கிபாஷா என்னும் குடியரசு தினப் பிரச்சாரம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது 415 மில்லியன் பார்வைகளைப் பெற்று டிரெண்டிங்காக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்களது தாய்மொழியில் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிக்கப் பயனீட்டாளர்களை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிக்கும். #தேஷ்கிபாஷா பன்முகம் கொண்ட இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். 200 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர் சமூகம் சிறப்பு மிக்க குடியரசு தினத்தைக் கொண்டாட டிக்டாக்-இல் ஒன்றிணைகிறது.

Related Posts
1 of 2

நாடு முழுவதுமுள்ள டிக்டாக் பயனீட்டாளர்கள் பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஹரியானவி உள்ளிட்ட மொழிகளில் குடியரசு தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நேரலையான இந்தப் பிரச்சாரம் 2020 ஜனவரி 27 வரை தொடரும். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தியா குறித்த அறிவையும், தகவல்களையும் பரிசோதிக்கப் பயனீட்டாளர்களிடையே இன்-ஆப் வினாடி வினா நிகழ்ச்சிகளுக்கும் டிக் டாக் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் குதூகலமான தருணத்தில் டிக்டாக் தனது பயனீட்டாளர்களுக்கு 71ஆவது குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. நமது நாட்டின் உண்மையான விளக்கமாகத் திகழும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் கருதுகோளில் நம்பிக்கை கொண்ட டிக் டாக்-உடன் சேர்ந்து அதன் திறமையான பயனீட்டாளர்களின் ஓர் அங்கமாகுங்கள்.

 

#TikTok #celebrate #71st #RepublicDay