IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

டிவி நேரலையில் மூழ்கியிருந்த பெற்றோர்! தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

0 327

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனின் மீட்கும பணியை ‘டிவி’ நேரலையில் பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வீட்டிலுள்ள தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள திரேஸ் புரத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். இவரது மனைவி நிஷா. இவர்களின் குழந்தை ரேவதி சஞ்சனா வயது ( 2 ). நேற்று லிங்கேஸ்வரன் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் நேரலைக் காட்சியை டிவியில் பார்த்துகொண்டிருந்தனர்.

இவர்களின் மகள் இரண்டு வயதான ரேவதி சஞ்சனா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தையின் பெற்றோர் டிவியில் மூழ்கிருந்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தன் குழந்தையை காணவில்லை என்று தேடிப் பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டிலுள்ள அனைத்து அறையிலும் தேடிப் பார்த்த போது குளியலறையில் உள்ள தண்ணீர் ஊற்றப்பட்டு இருந்த டிரம்மில் தவறி விழுந்திருந்தார். அதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையை மீட்டு உடனடியாக மருந்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருந்துவமனையில் குழந்தை ஏற்கனவே இறந்த விட்டதாக மருத்துவர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#tv #live #parents #water #baby