IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மன அழுத்தத்தைக் குறைக்கும் துளசி

Get real time updates directly on you device, subscribe now.

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. இவற்றை கோவிலில் தரப்படும் பிரசாதமாக தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கு துளசி உதவுகிறது.

தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். கருப்பு துளசியின் சாறு கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும். அதிலும் கண்களில் புண் இருந்தால், கடுமையான அரிப்பு, எரிச்சல் ஏற்படும். அப்போது துளசியின் சாற்றினை கண்களில் ஊற்றினால், விரைவில் குணமாகும்.

துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும். துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

#Thulasi #Benefits

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader