IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

சினிமாவை விட மக்கள் பாதுகாப்பே முக்கியம்! நாமே தீர்வு திட்டத்தில் கமல்ஹாசன்

Get real time updates directly on you device, subscribe now.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 1000க்கும் அதிகமான பாதிப்புகளை சென்னை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவலை குறைப்பதற்காக தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க “நாமே தீர்வு” என்ற இயக்கத்தை கமல்ஹாசன் தொடங்கியுள்ளார்.

இதன் மூலம் மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குதல், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிகள் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல், நாமே நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய சூழலில் உணவு, மருத்துவம் அளவிற்கு சினிமா அத்தியாவசியமானது இல்லை எனவும், எல்லோருடைய நன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் சினிமாவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader