IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

105


திருவண்ணாமலை அருணாச்சலஸ்வரர் கோவிலில் கார்த்திகை 1ம் தேதியில் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக பெரிய கார்த்திகை திருநாளான இன்று அதிகாலை 4.00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் உள்ள பரணி தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. மஹா தீபம் ஏற்றப்படுவதற்கு தேவையான கொப்பரைகள் அனைத்தும் தலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மேலும் மஹா தீபம் ஏற்றத் தேவையான 3500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.