IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மனைவியின் வளைகாப்பு பத்திரிகை கொடுக்கச் சென்றபோது விபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் பலி!

398

Get real time updates directly on you device, subscribe now.

 

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிந்தவர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிந்தவர் ராஜசேகரன். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது அவரது மனைவி கர்பமாக உள்ளார். முதல் பிரசவம் என்பதால் மனைவிக்கு வளைகாப்பு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

இதற்காக பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுத்து அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக இன்று காலை அவர், தனது தாயார் ஜமுனாராணி(53) மற்றும் சகோதரி, அவரது குழந்தை ஆகியோருடன் காரில் மேட்டுப்பாளையத்துக்கு சென்று உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுத்தார். பின்னர் மதியம் இரண்டு மணி அளவில் அனைவரும் காரில் திருப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவினாசி போலீஸ் சரகம் அன்னூர் அருகே உள்ள நரியம்பள்ளி புதூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் கார் திரும்பும்போது, எதிர்பாரதவிதமாக எதிரே வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

Related Posts
1 of 7

இதில் சம்பவ இடத்திலேயே தாயார் ஜமுனாராணி பரிதாபமாக இறந்தார். நிருபர் ராஜசேகரன், அவரது சகோதரி மற்றும் குழந்தை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரும் கோவை செல்லப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிருபர் ராஜசேகரன் பரிதாபமாக இறந்தார். சகோதரி, மற்றும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைதியான சுபாவம் கொண்ட நிருபர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

#thirupoor #accident #timesofindia #reporter #Rajasekaran Death

Get real time updates directly on you device, subscribe now.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More