இன்னும் 10 வருடங்களில் காணாமல் போகும் தொழில் வாய்ப்புகள்

Get real time updates directly on you device, subscribe now.

வளர்ந்து வரும் நம் நாட்டில் இன்னும் பலர் வேலை வாய்ப்புகளை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் உண்மையான நிலவரம் என்னவென்றால் படித்து வரும் இளைஞர்களில் சமூகத்தில் இறங்கும் முன்னரே பல வேலைவாய்ப்புகள் ஒவ்வொன்றாக காணாமல் போய்க் கொண்டிருகின்றன. அப்படி இன்னும் 10 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலை வாய்ப்புகள் குறித்து இங்கு காண்போம்.

பிரிண்டிங் வேலை

புத்தகங்கள் படிக்கவும், செய்திகள் படிக்கவும் தற்போது பெரும்பாலும் மொபைல் போன்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்து செய்தித்தாள் படிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு குறைந்து விட்டன.

நேரம் கிடைக்கும் போது செய்திகளை மொபைல் போன்களிலேயோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ படிக்கின்றனர். இதனால் பிரிண்டிங் மற்றும் பதிப்புத் தொழில் விரைவில் காணாமல் போகும் என்று அஞ்சப்படுகிறது. இத்துறையை நம்பி வாழும் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் இல்லாமல் போய்விடும்.

டிராவல் ஏஜெண்ட்

முன்பெல்லாம் பிளைட் டிக்கெட், ரயில் டிக்கெட் மற்றும் வெளியூர் பஸ் டிக்கெட் போட டிராவல் ஏஜெண்ட்டைத்தான் அணுகிச் செல்வார்கள். அவர்கள் மூலமாகத்தான் முன்பதிவு செய்ய முடியும். அதற்கென தனியாக ஏஜெண்ட் அமைப்புகளும் வந்தன. இதற்காக நாம் சற்று கூடுதலாகச் செலவிட்டு வந்தோம். ஆனால் தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது.

டாக்ஸி, ஆட்டோ, பேருந்து, ரயில், விமானம், தங்கும் விடுதி என அனைத்தையும் நாமாகவே முன்பதிவு செய்ய முடியும். இதில் ஏஜெண்ட்களுக்குச் செலவிடும் தொகையும் மிச்சமாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதே நிலை நீடித்தால் டிராவல் ஏஜெண்ட் போன்ற வேலையே இல்லாமல் போய்விடும். எனவே இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்வது ஆபத்துதான்.

பேங்க் டெல்லர்ஸ்!

வங்கிகளில் பணம் எடுக்கவோ பணம் போடவோ, ஏடிஎம்களில் பணம் எடுக்கவோ செல்லும்போது அங்கு உதவிக்காக சில பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள்தான் பேங்க் டெல்லர்ஸ். வங்கிச் சேவையில் அனுபவம் இல்லாதவர்களுக்கு உதவவும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கவும் அவர்கள் இருப்பார்கள். ஆனால் இப்போது பேலன்ஸ் தெரிந்து கொள்வது முதல் பணம் அனுப்புவது வரை எல்லோருமே மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். வீடு தேடி வரும் வங்கிச் சேவையும் வந்துவிட்டது. எனவே பேங்க் டெல்லர்ஸ் வேலை இனி இல்லை.

கட்டுமானப் பணி!

சிறிய வீடு கட்டுவது முதல் மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவது வரை முந்தைய காலங்களில் எல்லாம் மனிதர்கள் தான் பணியாற்றி வந்தார்கள். ஆனால் தற்போது கல் உடைப்பது தொடங்கி பெயிண்ட் அடிப்பது வரை எல்லாவற்றும் மெஷின்கள் வந்துவிட்டன. இதனால் கட்டுமானப் பணியும் விரைவில் முடிகிறது.

ஆனால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் கருகிக் கொண்டிருப்பது தெரிவதில்லை. படிப்பறிவில்லாதவர்களும், நன்றாகப் படித்த எஞ்சினியர்கள் வரை கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகளை நம்பி கோடிக்கணக்கானோர் உள்ளனர். இயந்திரங்களின் அணிவகுப்பால் இன்னும் பத்தே ஆண்டுகளில் கட்டுமானத் துறையில் மனிதர்களைப் பார்ப்பதே அரிதாகிவிடும் போல் இருக்கிறது.

விவசாயப்பணி

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் விவசாயம் இருக்கிறது. முன்பெல்லாம் நாற்று நடுவது முதல் அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்வது வரை எல்லாம் மனிதர்கள்தான். ஆனால், இப்போது அனைத்துக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன.

நாற்று நடுவது முதல் அறுவடை வரை அனைத்துக்கும் இயந்திரங்கள்தான். இயந்திரங்கள் அதிவிரைவாக வேலையை முடித்துவிடுகின்றன என்பதால் அனைவரும் இயந்திர மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். ஆனால் இத்துறையை நம்பி வாழும் பலரின் வேலைவாய்ப்புகள் ஒன்று ஒன்றாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More