புதிதாக இபாஸ் பெற அவசியமில்லை – தமிழக அரசு அறிவிப்பு

Get real time updates directly on you device, subscribe now.

ஜூலை 6-ஆம் தேதிக்குப் பிறகு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர முழு ஊரடங்குக்கு முன் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்பட்ட இ பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பணியாளர்கள் புதிதாக இபாஸ் பெற அவசியமில்லை என்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட இ பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இபாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More