IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கு இடமே இல்லை – சரத்பவார் பதிலடி

Get real time updates directly on you device, subscribe now.

பாஜகவுடன் என்றுமே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அஜித் பவாருக்கு பதிலடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார், துணை முதலமைச்சரதப பதவியேற்றார். இதுகுறித்து சமூக வலைதளமான டுவிட்டரில், தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பதாகவும், சரத் பவார் தங்களது கட்சி தலைவர் என்றும், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் – பாஜக கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியைத் தரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஜித் பவாரி கருத்திற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில் டுவிட்டரி் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மகாராஷ்டிராவில் சிவசேனா – காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது என்றும், மக்கள் மத்தியில் தவறான பார்வையை உண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்த அஜித் பவார் முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader