IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வட்டி வகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

Get real time updates directly on you device, subscribe now.

வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதமாகவே வைத்திருக்கிறது. அதே சமயம் வட்டி விகிதம் தொடர்ந்து 3.5 சதவீதமாகவே இருக்கும். ஜனவரி முதல் மார்ச் மாத 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும்.

நம்பிக்கையை நோக்கி இந்தியாவின் மனநிலை சென்று கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் உயர்ந்த பணவீக்க விகிதம் அக்டோபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாத காலக் கட்டத்தில் படிப்படியாக குறையும்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி உத்வேகம் பெறுவதற்கான நம்பிக்கை தரும் அறிகுறிகள் காணப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையை நோக்கி படிப்படியாக நகர்ந்து கொண்டிருக்கிறது ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader