IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தென்காசி: மல்லிகை பூ விலை கிடு,கிடு உயர்வு

74


தென்காசி மாவட்டத்தில் பூ மார்க்கெட்டிற்கு பிரசித்த பெற்ற ஊர் பாவூர்சத்திரம் அருகேயுள்ள சிவகாமிபுரம் ஆகும். இங்குள்ள மார்க்கெட்டிற்கு மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து தினமும் பிச்சி, கனகாம்பரம், மல்லிகை, கேந்தி, சம்பங்கி, கொளுந்து, துளசி, ரோஜா, முல்லைப்பூ, அரளி போன்ற பூக்களை ஏலத்திற்கு விவசாயிகள் கொண்டு வருவர். மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை கொள்முதல் செய்வர்.


கடந்த சில நாட்களாக பாவூர்சத்திரம் பகுதியில் மழை பெய்து வருவதால் சாகுபடி செய்த பூக்கள் விளைச்சலின்றி மார்க்கெட்டிற்கு குறைவான பூக்களே ஏலத்திற்கு வருகின்றன. சனிக்கிழமை மல்லிகை உள்ளிட்ட பூக்களின் வரத்து மிககுறைவாகவே இருந்தது.
நாளை (ஞர்யிறு) முகூர்த்த நாள் என்பதால் பூ மார்க்கெட்டில் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அனைத்து வகை பூக்களை வாங்குவதற்கு குவிந்தனர். குறிப்பாக மல்லிகை பூக்களை வாங்குவதற்கு அனைத்து வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு தங்கள் தேவைக்கேற்ப பூக்களை கொள்முதல் செய்தனர். ஆனால் மல்லிகை பூ மகசூல் இல்லாத காரணத்தினால் நேற்று 20 கிலோ வரைதான் விற்பனைக்கு வந்தது.


இதனால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்றுக்கு ரூ.3000த்திற்கு விற்பனையானது. மல்லிகை பூ விலையேற்றம் பாவூர்சத்திரம் பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


#thenkasi #malligai #rate