IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

ஷுவுக்குள் நுழைந்த நல்ல பாம்பு! அலறி ஓடிய 9வயது சிறுமி

Get real time updates directly on you device, subscribe now.

பள்ளி செல்லும் குழந்தையின் ஷுவுக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி அருகே உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவருடைய மகள் அவந்திகா. 9வயதான இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். அவந்திகா தினமும் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பியவுடன் தனது ஷுவை வீட்டுக்கு வெளியே கழற்றி போடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று பள்ளிக்கு கிளம்பிய அவந்திகா, தனது ஷுவை மாட்ட முற்பட்ட போது, அதிலிருந்து புஸ்ஸ்ஸ்…. என்று சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று அருகில் சென்று பார்த்த போது ஷுவுக்குள் பாம்பு ஒன்று சுருண்ட நிலையில் படுத்திருந்தது. இதனால் பாம்பை பார்த்து அலறிய சிறுமி, ஷுவை தூக்கி எறிந்து விட்டு பெற்றோரிடம் ஓடி சென்று கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் பாம்பு பதுங்கியிருந்த ஷுவை ஒரு பாத்திரத்தை கொண்டு மூடினர்.

பின்னர் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நபர், ஷுவிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்தார். பின்னர் அந்த பாம்பு தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader