IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

அரசியல்வாதிகளை விட வாக்காள பொதுமக்கள் புத்திசாலிகள் – சரத்பவார்

Get real time updates directly on you device, subscribe now.

அரசியல்வாதிகளை விடவும் வாக்காள பொதுமக்கள் வலிமை வாய்ந்தவர்கள். இந்திராகாந்தி, வாஜ்பாய் போன்ற வலிமையான தலைவர்கள் கூட தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர். எனவே அவர்களைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், நான் மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியதற்குப் பதிலடியாக சரத்பவார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவுக்கு நேர்காணல் அளித்துள்ளார். இதுவரை ‘சாம்னா’வில், பால்தாக்ரே, உத்தவ் தாக்ரே இருவர் நேர்காணல் மட்டுமே வந்துள்ள நிலையில் முதல் முறையாக சரத்பவார் நேர்காணல் வந்துள்ளது. அவர் கூறியதாவது:

ஜனநாயகத்தில், நாம் எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது. நீங்கள் வாக்காளர்களைத் துச்சமாக மதித்தால், வாக்காளர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். சக்திவாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா, வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் அர்த்தம், ஜனநாயக உரிமை அதாவது, அரசியல்வாதிகளை விட சாமானிய மக்கள் புத்திசாலிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லை மீறும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் எப்போதுமே பாடம் புகட்டுவார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவேன் எனும் நிலைபாட்டிலேயே சிந்திப்பது அகங்காரமாகும். இது அதிகரிக்கும் பட்சத்தில் மக்கள் பாடம் புகட்டுவர். பால்தாக்கரேவின் அரசு சித்தாந்தத்தால் உருவானது அல்ல. ஆனால் அரசு அதிகாரத்தை செயல்படுத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது, என்று கூறி உள்ளார்.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader