IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

மருந்து பொருள் ஏற்றுமதியால் மீண்டும் எழுச்சி பெற்ற பங்குச்சந்தை

Get real time updates directly on you device, subscribe now.

உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்த பங்குச்சந்தை தற்போது மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 2,037.72 புள்ளிகள் உயர்ந்து 29,628.67 -ஆக உள்ளது.

இதேபோன்று தேசிய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை நேற்றுடன் ஒப்பிடும்போது 586.6 புள்ளிகள் உயர்ந்து 8,670.40- ஆக அதிகரித்திருக்கிறது.

வங்கி, தகவல் தொழில்நுட்பம், ஃபார்மா, ஆட்டோ மொபைல்ஸ் பங்குகள்தான் பங்குச்சந்தை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. தற்போது 24 மருந்துகள் மீதான தட நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவப் பொருட்கள் தொடர்பான பங்குகள் ஏற்றத்தை சந்தித்துள்ளன.

இதேபோன்று ஆசிய பங்குச்சந்தைகளான ஹேங்செங், நிக்கே, ஸ்ரைட்ஸ் மைம்ஸ், தைவான், செட் ஆகியவையும் 2 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளான சி.ஏ.சி., எஃப்.டி.எஸ்.இ., டேக்ஸ் உள்ளிட்டவை 2 முதல் 4 சதவீதம் வரைஉயர்ந்துள்ளன.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. ஊரடங்கு முடிந்தபின்னர் பங்குச்சந்தையில் சீரான வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை அளிக்கப்பட்டது. வரும் 10-ம்தேதி புனிதவெள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பங்குச்சந்தை நடைபெறும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More