IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வணிக முத்திரையின் தேவையும் அதன் நன்மைகளும்

Get real time updates directly on you device, subscribe now.

நாம் அன்றாட வாழ்வில் பலவிதமான பொருட்களைப் பயன்படுத்து கின்றோம். நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களும் ஒரே வணிக குறி / வணிக முத்திரையைக் கொண்டிருப்பதில்லை. அவ்வகையில் பல பொருள்களின் பொதுபெயர்களும் மற்றும் பல பொருள்களின் வணிகக் குறியும் கலந்தே நமது மனதில் பதிவாகி விடுகின்றன. பல நேரங்களில் நமக்கு இதற்கான வேறுபாடுகளே தெரியாமல் போய்விடுகின்றது என்பதே ஆச்சரியம்.

உதாரணமாக, முகப்பூச்சுக்களைக் குறிப்பிடும்போது ‘பெளடர்’ என்ற பொதுப்பெயரிலேயே குறிப்பிடுகிறோம். Johnsons’ Baby Powder, Himalaya Baby Powder, Cussons Baby Powder என பல வணிக முத்திரையிலான பொருள்கள் இருக்கும் பட்சத்தில் பொதுப்பெயரில் ‘Powder’ என்றே நாம் பெரும்பாலும் அப்பொருளை நிறுவுகிறோம். நாம் தொடர்ந்து ஒரே முத்திரையிலான பொருளைப் பயன்படுத்தும்போது அதன் முத்திரையை தவிர்த்துவிட்டு பொதுப் பெயரிலேயே அழைக்க முற்படுவதே இதற்கு காரணமாகும்.

மறுநிலையில், மீ வகையைக் குறிப்பிடும்போது மேகி (Maggi) என்று ஒரு பொருளின் வணிக முத்திரைப் பெயரைக் கொண்டும் அழைப்பது வழக்கம். மேகி எனப்படுவது ஒரு வணிக முத்திரையாகும். மேகி எனும் வணிக முத்திரையைக் கொண்டு மீ வகை, soy souce வகை, chilli souce வகை என பலவகையான சமையல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் மேகி எனும் சொல் ஏதோ மீ வகைக்கான பெயராக பயன்படுத்தப்படுவதைக் காணலாம். இதே நிலையை பற்பசையைக் குறிப்பிடும்போதும் காணலாம். நாம் வேறு ஒரு வகை பற்பசையைப் பயன்படுத்துபவர்களாக இருந்தபோதும் பற்பசையைக் குறிப்பிட Colgate என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஒரு முத்திரை தொடர்ந்து வணிக சந்தையில் முன்ணணி வகிக்கும் பட்சத்தில் அம்முத்திரை பொருளின் பெயரையும் கடந்து நம் மனதில் பதிவாகிவிடுகின்றது.

இதனை நாம் வணிக பொருள்களின் முத்திரைகளை தெரிந்து வைத்திருப்பதில் காட்டும் அலட்சியம் என்று குறைசொல்லிவிட முடியாது. ஆனால், வணிக முத்திரை எனப்படுவது நாம் இவ்வளவு சாதாரணமாக எண்ணிவிடும் அளவுக்கு முக்கியத்துவம் குறைந்ததாகவும் ஆகிவிடாது. வணிக முத்திரையின் செயல்பாடுகளையும் பயன்களையும் அறியும் முன் எவையெல்லாம் வணிக முத்திரை என்றழைக்கப்படுகின்றன என்பதனை காண்போம்.

பிரிவு 3(1) சட்டத்தின்படி சாதனம்-device, பிராண்ட், தலைப்பு, எழுத்து, சொல், சொற்றொடர், குறிச்சொல்-label, பெயர், கையொப்பம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே முத்திரை (mark) என வகைப்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய அனைத்தையும் வணிக முத்திரையாக பதிவு செய்து வணிக முத்திரை சட்டம் 1976ன்கீழ் பாதுகாக்க முடியும். சட்ட ரீதியிலான பாதுகாப்பு ஒருபுறம் இருக்க பொருள்/சேவை ஆகியவற்றிற்கும் அதன் உரிமையாளருக்கும் உள்ள தொடர்பினை காட்டவும் வணிக முத்திரை உதவுகிறது.

அதாவது, வணிக முத்திரை என்படுவது ஒரு பொருளை அல்லது சேவையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அல்லது தனிநபருக்கு/குழுவினருக்கு குறிப்பிடத்தக்க ஒரு பொருளின் அல்லது சேவையின் மீது உள்ள தொடர்பைக் காட்டும் எனலாம். உதாரணமாக milo மற்றும் nescafe ஆகிய இரண்டு பெயர்களில் பானங்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே Nestle எனும் வணிக முத்திரையின்கீழ் தயாரிக்கப்படும் பானங்களாகும். ஆக, இவ்விரு பானங்களுக்கும் இடையேயான தொடர்பையும் அதன் உரிமையாரின் தொடர்பையும் காட்ட வணிக முத்திரை முக்கிய பங்காற்றுகிறது.

பெரும்பாலும் பெயர்களுடன் சின்னங்கள், வசனங்கள், எண்கள், படங்கள், வடிவங்கள், ஓவியங்கள், ஓசை வடிவங்கள் மற்றும் நிறங்கள் என ஒன்றுக்கும் பேற்பட்டவை இணைக்கப்பட்டு வணிக முத்திரையாக்கப்படிருப்பதைக் காணலாம். உதரணமாக, KFC உணவு வகைக்கான வணிக முத்திரையாக KFC என்ற மூன்று எழுத்துகள், சிவப்பு வெள்ளை, கருமை ஆகிய நிறத்திலான கிழவரின் உருவம், it’s finger-lickin’ good எனும் சொற்றொடர் ஆகியவற்றைக் கூறலாம். அதேபோல apple ரக பொருள்களில் ஒரு பகுதி கடிக்கப்பட்ட ஆப்பிளின் படத்தை மட்டுமே கொண்டு அதன் வணிக முத்திரை நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம்.

மலேசிய சூழலில் வணிக முத்திரை

வணிகச் சந்தையில் தொடர்ச்சியான போட்டிகள், வளர்ச்சியானது காளான்களைப் போல ஒவ்வொரு நாளும் பல வணிக முயற்சிகள் தொடங்கப்பட்டு தொடங்கிய வேகத்திலேயே மூடப்பட்டுவிடும் சூழல்கள் இருக்கும் நிலையில் அனைத்து வணிகங்களுமே வணிக முத்திரையை பதிவு செய்வதென்பது பொருத்தமற்றதாகும். எனவே, மலேசிய நாட்டை பொருத்தமட்டில் வணிக முத்திரை இன்றுவரை கட்டாயப்படுத்தப் படவில்லை. மலேசியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் வணிக முத்திரை பதிவு கட்டாயப்படுத்தப்படாமலேயே இருக்கின்றது. ஆனால், சட்டபூர்வமான பாதுகாப்பு கறுதி வணிக முத்திரைகள் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற அறிவுறுத்துதலையும் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றன.

உள்துறை, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் (Kementerian Dalam Negeri, Koperasi dan Kepenggunaan) கீழ் இயங்கும் Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பின்வழி வணிக முத்திரை பதிவினை மேற்கொள்ள வேண்டும். Perbadanan Harta Intelek Malaysia எனும் அமைப்பில் மட்டுமின்றி நாடு தழுவிய அளவில் 470க்கும் மேற்பட்ட வணிக முத்திரை பதிவு முகவர்கள் (Trade Mark Agent) மூலமாகவும் வணிக முத்திரை பதிவினை நாம் செய்துகொள்ள முடியும். இவை அனைத்தும் Perbadanan Harta Intelek Malaysia அமைப்பின்கீழ் சட்டப்படி பதிவுபெற்ற முகவர்களாவர்.

அரசாங்கத்தின் அங்கிகாரம் பெறாத முகவர்களிடம் பதிவு செய்யபடும் முத்திரைக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படாது என்கிற நிலையில் இப்பதிவு வேலைகளில் ஈடுபடுபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் முகவர்கள் அரசாங்க அங்கிகாரம் பெற்றவர்களா என்பதனை நன்கு உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே பதிவு வேலைகளில் ஈடுபடுவது சிறப்பாகும்.

இவ்வாறு மலேசியாவில் பதிவு செய்யப்படும் முத்திரைக்கு மலேசியாவில் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும், பாரிஸ் மாநாட்டில் அங்கத்துவம் பெற்ற நாடுகளிலும் (Paris Convention) மற்றும் உலக வர்த்தக அமைப்பு அங்கத்துவம் பெற்ற நாடுகளிலும் (WTO) இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முத்திரையைக் கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஓரளவு வாய்ப்புகள் உள்ளன. இவற்றை தவிர்த்து மற்ற நாடுகளில் நம்முடைய வர்த்தக சந்தை விரிவாகும் வாய்ப்புகள் இருப்பின் அந்நாடுகளிலும் தனித்தனியாக வணிக முத்திரை பதிவு செய்துக்கொள்வதே சிறப்பு. மேலும், மலேசியாவில் பயன்படுத்தப்பட உள்ள பொருளுக்கு அப்பொருளின் உரிமையாளர் (மலேசியர் / மலேசியர் அல்லாதவர்) பதிவு விண்ணப்பத்தை மேற்கொள்ள முடியும்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader