IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

இந்திய குடும்பங்களின் விருப்பமான ஐகானிக் மாருதி சூசூகி ஆல்டோ

Get real time updates directly on you device, subscribe now.

  • 40 லட்சம் விற்பனை மைல்கல்லைத் தாண்டிய இந்தியாவின் ஒரே மகிழுந்து ஆல்டோ
  • தொடர்ந்து 16 வருடங்களாக இந்தியாவின் அதிக விற்பனையாகும் நெ.1 மகிழுந்து
  • நிகழ்நிலைப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், எரிபொருள் திறன் உள்லிட்ட சிறப்பான வடிவமைப்பு காரணமாக முதல் முறையாக மகிழுந்து வாங்குவோரின் விருப்பமாக உள்ளது

இந்திய ஆட்டோமொபைல் துறையில் தொடர்ந்து பெஞ்ச்மார்க் அளவுகளை நிர்ணயித்து வரும் இந்தியாவின் அதிக விரும்பப்படும் மகிழுந்தான மாருதி சுசூகி ஆல்டோவின் மொத்த விற்பனை 40 லட்சங்களைத் தாண்டியதைப் பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த வலுவான பாரம்பரியப் பிண்ணனி ஆதரவுடன், முதல் மகிழுந்து வாங்க ஆசைப்படும் 76% தங்கள் முதல் விருப்பமாக ஆல்டோவைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவின் அதிக விற்பனையாகும் மகிழுந்தாக முடிசூட்டப்பட்டுள்ள ஆல்டோ மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களின் ஈடு இணையற்ற நம்பிக்கை மற்றும் ஆதரவின்றி இந்தச் சாதனையைப் படைத்திருக்க முடியாது.

2000 முதல் தொடர்ந்து இதன் புகழும் நம்பகத்தன்மையும் அதிகரித்து வரும் நிலையில், மாருதி சுசூகி ஆல்டோ எல்லைகள் தாண்டி எண்ணற்ற குடும்பங்களில் ஓர் உறுப்பினராகவே ஆகியுள்ளது. நிகழ்நிலை மேம்பாடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் தனது பாரம்பரியப் பெருமையை ஆல்டோ தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது 40 லட்சம் இந்தியக் குடும்பங்களின் போக்குவரத்தை வழங்கிய பிராண்ட் ஆல்டோ இந்திய மகிழுந்து சந்தையில் தொடர்ந்து 16 ஆண்டுகளாகத் தனது முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் செயல் இயக்குஅன்ர் (சந்தையியல் & விற்பனை) ஷஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில் ‘தொடர்ந்து 16 ஆண்டுகலாக ஆல்டோ இந்தியாவின் நெ.1 விற்பனையாகும் மகிழுந்தாக விளங்குகிறது என்பதுடன் 40 லட்சம் விற்பனை என்னும் மைல்கல் சாதனையையும் கடந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறோம். வேறெந்த இந்திய மகிழுந்தும் இந்த விற்பனைச் சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intellectual Property Protection | Trade Marks

பல ஆண்டுகளாகவே பிராண்ட் ஆல்டோ எங்கள் வாடிக்கையாளர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பை வலுவாக நிறுவியதுடன் பெருமையின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்தியாவின் பிரபலமான மகிழுந்தாக உருவெடுக்க நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து முழு ஆதரவளித்த எங்கள் பெருமைமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஆல்டோ குடும்ப உறுப்பினர்களுக்கே இந்தச் சாதனையை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

ஆல்டோ வெற்றிக்கான முன்மொழிவு அதன் வித்தியாசமான மற்றும் கச்சிதமான நவீன வடிவமைப்பு, எளிதான போக்குவரத்து, உயர் எரிபொருள் திறன், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதியான அம்சங்களே ஆகும். ஆல்டோவின் சுகமான இயக்க அம்சம், ஸ்டைலான தோற்றம், மாருதி சுசூகியின் நாணயம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவையே புத்தம் புதிய ஆல்டோவை இந்திய வாடிக்கையாளரின் விருப்பமாக உள்ளது. நிகழ்நிலை மேம்பாடு மற்றும் பிராண்டின் புத்துணர்வு ஆகியவையே ஆல்டோவின் வலுவான வாடிக்கையாளர் அடித்தளத்துக்கான சான்றாகும்

பிஎஸ்6 தர மதிப்பீடு மற்றும் சமீபத்திய க்ராஷ் மற்றும் பாதசாரி பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமான இந்தியாவின் முதல் நுழைவு நிலை மகிழுந்தாக ஆல்டோ விளங்குகிறது. ஆல்டோவின் அசத்தலான புதிய ஏரோ எட்ஜ் வடிவமைப்பும், சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாது உரிமை அனுபவத்தை வழங்குகிறது. இதன் எரிபொருள் திறன் பெட்ரோல் லிட்டருக்கு / 22.05 கிமீ மற்றும் சிஎன்ஜி கிலோவுக்கு / 31.56 கிமீ ஆகும்.

Intellectual Property Protection | Trade Marks

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader