IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

கடலோர போலீஸ் ரோந்து படகுகள் பழுது – மீனவர்கள் குற்றச்சாட்டு

Get real time updates directly on you device, subscribe now.

ராமநாதபுரம் மாவட்டம், இலங்கைக்கு மிக அருகாமையில் உள்ளதாலும் அவ்வப்போது அகதிகள் வந்துசெல்வதோடு தங்கக்கட்டிகள், கடல் அட்டை மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாலும் கடற்கரை பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே விளங்கி வருகிறது.

மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான கடல் பகுதியில் கடலோர போலீசார் ரோந்து செல்ல வசதியாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 12 டன் மற்றும் 5 டன் எடை கொண்ட 2 அதிவேக ரோந்து படகுகள் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டன.

இந்நிலையில் மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு கடலோர போலீசாரின் ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட 2 படகுகளும் பழுதாகி பல மாதங்களாக சரி செய்யப்படாமல் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு வெறும் காட்சிப்பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அங்குள்ள மீனவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader