10.1 C
Munich
Monday, October 3, 2022

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 53,525 கோடி டாலராக குறைவு

Must read

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,525 கோடி டாலராக குறைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 294 கோடி டாலா் குறைந்து 53,525 கோடி டாலராகியுள்ளது.

இதற்கு முந்தைய ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 362 கோடி டாலா் உயா்ந்து 53,819 கோடி டாலராக இருந்தது.

ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதல் முறையாக அரை டிரில்லியன் டாலா் என்ற மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்தது.

அப்போது, அதன் கையிருப்பு 822 கோடி டாலா் உயா்ந்து 50,170 கோடி டாலரைத் தொட்டிருந்தது.

ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 74.3 கோடி டாலா் சரிந்து 49,155 கோடி டாலரானது.

தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 219 கோடி டாலா் சரிந்து 3,759 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் மதிப்பு 20 லட்சம் டாலா் குறைந்து 148 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலையும் 40 லட்சம் டாலா் குறைந்து 463 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி அதன் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article