IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

வணிக முத்திரையை பயன்படுத்துவதால் பொதுமக்கள் அடையும் நன்மைகள்

Get real time updates directly on you device, subscribe now.

  1. வாணிகப் பொருளை அடையாளங்காண உதவும்

வணிக முத்திரை இருப்பதன்மூலம் பயனிட்டாளர்கள் ஒரு பொருளின் வெளியிட்டாளர் யார் என்பதை எளிதில் அறிந்துகொள்ள உதவுகின்றது. உதாரணமாக, Johnson & Johnson என்பது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் முகம், தோல், தலைமுடி போன்ற பகுதிகளை பராமரிக்கப் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் பொருள்களின் வணிக முத்திரையாகும். இம்முத்திரையின்கீழ் Johnson’s Baby Lotion, Baby Shampoo, head-to-toe wash என ஐந்திற்கும் மேற்பட்ட சருமம் மற்றும் முடி பராமரிப்புப் பொருள்கள் வணிக சந்தையில் கிடைக்கப் பெறுகின்றன.

Johnson & Johnson பொருள்களில் ஏதேனும் ஒன்றை வாங்கி பயன்பெற்ற பயனிட்டாளர்கள் தொடர்ந்து அதன் மற்ற தயாரிப்புப் பொருட்களை அடையாளங்கண்டு வாங்க இவ்வணிக முத்திரை பேருதவியாக இருக்கும். அவ்வாறே ஒரு வணிக முத்திரையிலான அனைத்து பொருட்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்படும்போது பயனிட்டாளர்கள் அவற்றை மிக சுலபமாக அடையாளம் கண்டு விழகவும் வணிக முத்திரை உதவியாக அமைகின்றது.

2. விருப்பத்திற்குரிய பொருளை எளிதில் தேர்ந்தெடுக்க உதவும்

வணிக முத்திரையின் உதவியோடு பயனிட்டாளர்கள் தங்களின் விருப்பமான பொருளை எளிதில் தேர்ந்தெடுக்க முடிகின்றது. அதாவது ஒரு பொருளை வாங்கி திருப்தி அடைந்த பின்னர் மீண்டும் அதன் சேவையைத் தொடர; வாங்கி பயன்படுத்த அப்பொருளின் வணிக முத்திரை மிக மிக அவசியமாகின்றது. எந்தவொரு வணிக முத்திரையும் அற்ற பொருளை மீண்டும் பெருவதில் ஏற்படும் சிக்கல்களை சற்று சிந்தித்துப் பார்த்தால் அதன் இன்றியமையா தேவையினை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

உதாரணமாக, முடி உதிர்வதை நிவர்த்தி செய்யும் எண்ணெயை (வணிக முத்திரை இல்லாத) வாங்கி பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அதனைப் பயன்படுத்தி முடி உதிர்வது குறைந்துவிட்டால் மீண்டும் அவ்வெண்ணையை எங்கு போய் என்ன சொல்லி வாங்குவது? வணிக முத்திரை இல்லாத நிலையில் அந்த எண்ணெய் புட்டியின் வடிவத்திலேயே;நிறத்திலேயே;பெயரிலேயே போலியான மற்ற பொருட்களை வாங்கி ஏமாந்துப் போவது நிச்சயம். ஆக, நம் பயன்பாட்டிற்கான மிகச் சரியான பொருளை வாங்க வணிக முத்திரை மிக மிக அவசியமாகின்றது.

3. பொருளின் தரம் தொடர்பான நம்பிக்கையை வழுக்கச் செய்கிறது

பெரும்பாலும் பயனிட்டாளர்கள் ஒரு பொருளை வாங்கி பயன்படுத்திவிட்டு மீண்டும் அதன் சேவையை நாடுவது வழக்கம். போட்டி தன்மைமிக்க வியாபாரத் துறையில் ஒரு பொருளுக்கு இருக்கும் மதிப்பு, அதன் தரம் மற்றும் சேவை ஆகிய அம்சங்களே வணிக சந்தையில் அதன் தொடர் நீட்டிப்பை நிர்ணயம் செய்கின்றன. முன்கூறிய மூன்று அம்சங்களை ஒருங்கே அமையப்பெற்ற பொருள் மக்களால் வெகு விரைவில் கவர்திழுக்கப்படுவதோடு அதன் வணிக முத்திரையும் மிக சுலபமாக பிரபலமாகிவிடும்.

உதாரணமாக, விவேக கைபேசியை எடுத்துக் கொள்வோம். உலக சந்தையில் எத்தனையோ வகை விவேக கைபேசிகள் இருந்தும்கூட Apple முத்திரை கொண்ட விவேக கைப்பேசியே உலக சந்தையை அதிக அளவில் பிரபலமானதாகவும் அதிகம் விற்பனையாவதாகவும் இருக்கின்றது. மற்ற விவேக கைபேசியை ஒப்பிடுகையில் இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட தரத்தை அடிப்படையாகக் கொண்டு பயனிட்டாளர்கள் இம்முத்திரையிலான கைபேசியை வாங்குகிறார்கள். பயனிட்டாளர்களை பொருத்த மட்டில் Apple முத்திரையிலான பொருள்கள் அனைத்துமே தரமானது எனும் உறுதியான நம்பிக்கையை அம்முத்தியின்வழி அதன் நிறுவனம் நிலைநாட்டியுள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ளலாம்.

முடிவு

வணிக முத்திரை எனப்படுவது வணிகர்களுக்கு தங்களை வணிக சந்தையில் தனித்துக் காட்ட உதவும் அதேவேளை பயனிட்டாளர்களுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருப்பதை ஓரளவு விளங்கிக் கொண்டிருப்போம். நாம் வணிக முத்திரை பதிவை புறக்கணிக்கும் தருணம் நமது போட்டியாளர்களுக்கு விசாலமான வணிக வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தருகிறோம் என்பதை நன்கு உணர வேண்டும்.

இப்போது அலட்சியம் காட்டும் நாம், நமது பொருளின் அல்லது சேவையின் தரத்தால் ஓரளவு சந்தையில் பிரபலம், நன்பதிப்பு பெற்றுவிடும் நிலையில் வேறு நிறுவனம் இம்முத்திரையைப் பயன்படுத்தி பன்மடங்கு லாபம் ஈட்டுவதை தடுக்க முடியாத இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும்போது இதன் அவசியத்தை அறிய நேரலாம். இப்படி அனுபவங்களின்வழிதான் வணிக முத்திரையின் அவசியத்தைப்பற்றி உணர்வோம் என்றால் நாம் அதற்காக இழக்கபோவது அதிகம்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader