IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பஞ்சாயத்து தலைவியான 21 வயது கல்லூரி மாணவி

63

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 வயது மட்டுமே நிரம்பிய கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிச.27,31ந் தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் காட்டிநாயக்கன்தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சந்தியாராணி (21) என்ற கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார். தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 3-ம் ஆண்டு படித்து வரும் இவரது தாய் ஜெய்சாரதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார்.

சந்தியாராணியை எதிர்த்து 3 பெண்கள் போட்டியிட்டனர். இதில் 1056 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கல்லூரி மாணவி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது அக்கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி குறித்து சந்தியா ராணி கூறுகையில். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு முழு கவனம் செலுத்துவேன் என்றும், தற்போது கல்லூரிக்கு சென்று வருவதால் மாலை நேரத்திலும், விடுமுறை நாட்களிலும் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிவேன். படிப்பு முடிந்ததும் முழு நேரமாக மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.