IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தினமும் ஒரு பெண் இல்லாமல் தூங்க மாட்டார் என் கணவர்! கூலிப்படையை விட்டு ஏவி கொன்ற மனைவி தகவல்

Get real time updates directly on you device, subscribe now.

தஞ்சாவூரில் சில நாட்களுக்கு முன் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த யூசுப் என்பவர் மேம்பாலத்தில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தக் கொலைக்குப் பிறகு தஞ்சை மாவட்ட எஸ்பி மகேஷ்வரன் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைத்து எஸ்ஐ கண்ணன் தலைமையில் ஒரு டீம் குற்றவாளிகளை தேடி வந்தது. இந்நிலையில் போலீஸ் விசாரணையில் இறந்த யூசுப் மனைவி அசிலா தான் கொலை குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி அசிலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அவர் கூறுகையில், என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. அவர் தினமும் ஒரு பெண் இல்லாமல் தூங்க மாட்டார், என் குழந்தைகளை அவர் கவனிக்கவில்லை, எங்களது செலவுக்கு எந்தவித பணமும் கொடுப்பதில்லை.

ஆரம்பத்தில் இருந்தே அடுத்த பெண்களுக்கு மட்டுமே செலவு செய்து வந்தார். சில சொத்துக்களை மற்றவர்களுக்கு இலவசமாக கொடுத்து விட்டார், அதனால் தான் நான் வெறுப்பாகி திருச்சி கூலிப்படையை வைத்து என் கணவரை தீர்த்துக் கட்டினேன் என மனைவி அசிலா கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணவனை கூலிப்படையை விட்டு ஏவி மனைவியை கொலை செய்ததாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ள விவகாரம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader