IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலம்

Get real time updates directly on you device, subscribe now.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மிகவும் கம்பீரமாக தோற்றத்துடன் காணப்படும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்குவிழா 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடை பெற்று வருகிறது. இதனால் தஞ்சை மாநகரமே விழாகோலம் பூண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மிகவும் கம்பீரமாக தோற்றம் அழிக்கிறது.

அதிகாலை முதலே பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மந்திரங்கள் முழங்க பெருவுடையார் விமானமான தஞ்சை பெரிய கோபுரத்திற்கும் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இந்த கோவிலில் மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டும் அல்லாது பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதற்காக தஞ்சைக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளனர். கோவில் மதிற்சுவருக்குட்பட்ட வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளதால் சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

#thanjai #periya #kovil #kumbabisekam

 

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader