சட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..? நிர்வாகிகளுடன் ஆலோசனை

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சரியான நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறி இரண்டு நாட்களே ஆன நிலையில் இன்று விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்கி வருகிறது. இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள், ஏழை மாணவர்களுக்கு நோட்புக் வழங்குதல் போன்ற நற்பணிகளை செய்து வருகின்றனர். கொரோனா லாக்டவுன் காலத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தனர்.

சென்னை அருகே உள்ள பனையூரில் செயல்பட்டு வரும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில் மாதங்களே உள்ள நிலையில் திருச்சி தெற்கு, திருச்சி மேற்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய்.

இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Your Digital PR

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More