IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தாய்லாந்து ஓபன் தொடரில் சாய்னா ஏமாற்றம்

4


தாய்லாந்து பாங்காக்கில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னாவும் , ஜப்பானின் சயாகாதகாசியை எதிர் கொண்டார்.


இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னா, 21-16 என்ற செட் கணக்கில் வென்றார். அடுத்த இரண்டு செட்களிலும் ஜப்பானின் சயாகாதகாசி ஆதிக்கம் செலுத்தினார்.


இறுதியில் ஜப்பானின் சயாகாதகாசி 21-16, 11-21, 14-21 என்ற செட் கணக்கில் வென்றார். சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார்.