IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தை அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவிலில் பக்தர்கள் தீர்த்தமாடி சாமி தரிசனம்

74

 

தை அமாவாசையை முன்னிட்டு அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகர்கோவில் உள்ளது. அதன் மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வமாகும். மேலும் இங்குள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி தங்களது வீட்டிற்கு தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம்.

அதேபோல தை அமாவாசை சிறப்பு நாளான இன்று அதிகாலை முதலே அதிக அளவில் பக்தர்கள் நூபுர கங்கையில் புனித நீராட வரத்தொடங்கினர். பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு தேங்காய், பழம், மலர்மாலை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் வரும் வழியில் உள்ள முபுகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாக அதிகாரி அனிதா தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

#Thai #amavasai #alagar #kovil