IN4NET.COM
Hybrid Smart "Information Network" Channel

திமுக செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன்

Get real time updates directly on you device, subscribe now.

கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய குற்றப்பிரவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.பாரதியை இன்று காலை கைது செய்தனர்.

ஆர்.எஸ்.பாரதியின் கைது முன்னிட்டு சென்னை ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆர்.எஸ். பாரதியை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்ட ஆர்எஸ் பாரதிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திமுக வக்கீல்கள் வாதிட்டனர்.

இறுதியில் ஜூன் 1ம் தேதி வரை ஆர்எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

Comments
Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

ajax-loader