IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கோவில் நிலங்களை ஏழைகளுக்கு கொடுப்பதா…? எச்.ராஜா கருத்து

82

கோவில் நிலங்களை ஏழைகளுக்கு பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியிருப்பது பொருத்தமானதல்ல என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மதுரையில் நடைபெற்றது. முனிச்சாலையில் தொடங்கிய அணிவகுப்பு கீழமாசிவீதி, பந்தடி, நவபத்கானா தெரு, மகால் சுற்று வீதிகள், தெற்குமாசி வீதி வழியாக மீண்டும் முனிச்சாலையில் முடிவடைந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கட்டிடங்கள் உள்ளன. அவற்றை ஏழை மக்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. கோவில் நிலங்களை ஏழைகள் என்ற போர்வையில் ஆக்கிரமித்துள்ளனர். எனவே ஏழைகளுக்கு கொடுப்பது என்பது சரியல்ல என்று ராஜா தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு அளித்துள்ள விருது அவருக்கு மட்டும் வழங்கப்பட்டதாக எண்ணக் கூடாது. தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் வழங்கிய விருதாக கருத வேண்டும். அதற்காக பெருமைப்பட வேண்டும் என்றும் கூறினார்.
#RSS #HRaja #Madurai #In4Net