10.1 C
Munich
Monday, October 3, 2022

இந்தியாவில் ஐந்து டைட்டானியம் மதீப்பீடு பெற்று இண்டஸ் டவர்ஸ் புதிய சாதனை

Must read

மறைமுக தகவல்தொடர்பு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கிவரும் இந்தியாவின் முன்னணி நிறுவனமான இண்டஸ் டவர்ஸ் லிமிடெட், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் அமைப்பால் சேமிப்புக் கிடங்கு தொழிற்பிரிவில் சிறந்த சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கிழக்கு உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் உள்ள அதன் சேமிப்பு கிடங்குகளுக்கு சிஐஐ வாரெக்ஸ் என்கிற  சேமிப்புக் கிடங்கின் சிறந்த செயல்பாட்டிற்கான அங்கீகாரம் மற்றும் சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம், இண்டஸ் டவர்ஸ், இந்தியாவில் ஐந்து டைட்டானியம் மதிப்பீடு பெற்ற சேமிப்புக் கிடங்கு வசதிகளைக் கொண்ட ஒரே நிறுவனமாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் உள்ள அதன் சேமிப்புக் கிடங்கு (மும்பை) பிளாட்டினம் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. வாரெக்ஸ் அங்கீகார தரநிலைகளில் இது இரண்டாவது மிக உயரிய மதிப்பீடாகும்.

எந்தவொரு தொழில் செயல்பாட்டிலும் சேமிப்புக் கிடங்கு சேவை மூலம் ஆதரவளிப்பது என்பது ஒரு முக்கிய மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஏனெனில், தளவாடங்களை அப்ஸ்ட்ரீம் மற்றும் டவுன்ஸ்ட்ரீம்  செய்வதை இதுவே முறைப்படுத்துகிறது. ஒரு கிடங்கின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் இப்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. காரணம் – உற்பத்தியின் செயல்திறனையும், வாடிக்கையாளர்களின் திருப்தியின் அளவையும் இதுவே வரையறுக்கிறது. இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதிலுமிருந்து செயல்படுகிறது. பல மாநிலங்களில் உள்ள 22 கிடங்குகள், 21 லட்சம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளன. இவை தளவாடங்களின் மேலாண்மை மற்றும் விநியோகங்களை மிகவும் நிலையான மற்றும் முறைப்படுத்தப்பட்ட வழியில் வழங்குகின்றன.

சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸின், ஹெட் –  சப்ளை செயின் கன்சல்டிங், வெங்கடேஷ் சேஷாத்ரி பேசுகையில், “சிஐஐ – வாரெக்ஸ் டைட்டானியம் மதிப்பீடு பெற்ற ஐந்து  சேமிப்புக் கிடங்குகளைக் கொண்ட இந்தியாவில் முதல் நிறுவனமாக இண்டஸ் டவர்ஸ் உள்ளது. அதிக மதிப்பிற்குரியதாக கருதப்படும் டைட்டானியம் மதிப்பீட்டின் அங்கீகாரம் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்ததற்கு செயல்முறைகளை கடைபிடித்தல், தளவாடங்களை கையாள்வதில் சிறந்த நிர்வாகத் திறன், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் தேவையற்றது என ஒதுக்கப்படும் பொருள்களை மீண்டும் பயன்படுத்தும் ‘நிலைத்தன்மையை பேணும் மறுசுழற்சி’  அணுகுமுறையை பின்பற்றுவது போன்ற பல முற்போக்கான நடவடிக்கைகள் முக்கிய காரணங்களாகும்” எனத் தெரிவித்தார்.

இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் அண்ட் தலைமை நிர்வாக அதிகாரி, பிமல் தயாள் இதுபற்றி கூறுகையில், “இந்த அங்கீகாரமானது இண்டஸின் ஆற்றல்மிக்க விநியோகத் தொடருக்கான ஒரு சான்றாகும். இது எங்களது டவர்களின் செயல்பாட்டு நேரம், விரிவான சேவைகள் மற்றும் சேவைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது, அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், எங்களது கார்பன் தடங்களை குறைந்தபட்ச அளவில் வைக்கவும் உதவுகிறது. ராஜ்புரா, ஜெய்ப்பூர், லக்னோ, பெங்களூரு மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள எங்களின் சேமிப்புக் கிடங்குகள் சிஐஐ – வாரெக்ஸின்  தரநிலை மதிப்பெண்ணை எட்டியது மட்டுமல்லாமல், ஒரு வலுவான கிடங்கிற்கான முன்மாதிரியாகவும் இருந்து உயர் தரநிலைகளையும் கடந்துள்ளன” என்றார்.

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article