IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தெலங்கானா கால்நடை மருத்துவரின் ஆத்மா சாந்தியடையும் – போலீசாருக்கு குவியும் பாராட்டுகள்

198

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை என்கவுன்டரில் போலீசார் சுட்டுத்தள்ளியது.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச்சாவடி அருகே 26வயது பெண் கால்நடை மருத்துவரை, லாரி ஓட்டுநர் உட்பட நான்குபேர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து உச்சக்கட்ட தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்தது.

இந்த வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

போலீசாரின் அதிரடி தாக்குதலுக்கு பிறகு பாலியல் வன்கொடுமையால் எரித்துக் கொல்லப்பட்ட கால்நடை மருத்துவரின் தந்தை கூறியதாவது, என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. வழக்கு தொடர்ந்து மேலும் வருடக்கணக்காக இழுக்காமல் குற்றவாளிகள் 4 பேரையும் அதிரடியாக என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் எனது மகள் ஆத்மா நிம்மதியாக சாந்தியடையும். 4 காமூகன்களையும் சுட்டுக் கொன்ற போலீசாருக்கும் தெலங்கானா அரசுக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை கேள்விப்பட்ட கல்லூரி மாணவிகள் பேருந்தில் செல்லும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பார்த்து கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
#Telangana #PoliceEncounter #Encounter #hyderabadpolice #justiceforpriyanakareddy #JusticeForDisha #VCSajjanar #In4Net