ஓவியத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை ஓவியத்தின் சிறப்புகள்

0
14

புகைப்படம் மற்றும் பிரிண்டிங் இவைகள் இல்லாத காலத்தில் கடவுளின் உருவத்தை ஓவியமாக வரைந்தார்கள்.

ஓவியங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று தஞ்சாவூர் ஓவியம். பல வண்ணங்கள் மற்றும் பல டிசைன்களில் இந்த ஓவியங்களை உருவாக்குவார்கள்.

தஞ்சையில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தான் இந்த ஓவியக்கலை பிரபலமாகியது. ஆரம்பகால கட்டத்தில் கடவுளின் உருவத்தை ஓவியமாக வரைந்தார்கள். அதுதான் தஞ்சை பெயிண்டிங்.

அதன்பிறகு 16-17ம் நூற்றாண்டுகளில் இவர்களின் ஆட்சி போனபிறகு அதன்பின்னர் வந்தவர்கள் இந்த ஓவியக்கலையின் மகிமை புரிந்து ஓவியத்தை மேம்படுத்தினர்.

மராட்டியர்கள் வந்தபிறகு தான் தஞ்சை ஓவியங்கள் மிகவும் பிரபலமாகியது. ஆரம்பகாலத்தில் அரண்மனை முழுவதும் தஞ்சை பெயிண்டிங்கை நிரப்பி வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த பெயிண்டிங்கை நிறைய இடங்களுக்கு அனுப்பி பிரபலமடைய செய்தனர்.

ஆந்திராவில் ராயலசிம்மவோட பகுதியில் மூச்சி என்ற இனத்தவர்கள் தான் இந்த தஞ்சாவூர் பெயிண்டிங்கை உருவாக்கினார்கள்.

காலத்திற்கேற்ற மாதிரி கலரை மாற்றி இந்த பெயிண்டிங்கில் பிரபலமடைய செய்தனர். அதன்பிறகு இது அவர்களின் குல தொழிலாக மாறியது.

 

சரபோஜி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சாவூர் பெயிண்டிங் வேற லெவலில் பிரபலமாகியது.

இந்த பெயிண்டிங் மேல் நல்ல அபிப்ராயம் இருந்ததால் அந்த பெயிண்டிங் கலைஞர்களை கவுரவித்து நிறைய பரிசுகளையும் வழங்கியுள்ளார். அதனால் தான் இது உலகளவில் பிரபலமாகியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தவுடன் இந்த ஓவியக்கலையை பார்த்து மிரண்டு போனார்கள். அதன்பிறகு வெளிநாட்டினர்கள் அவர்கள் நாடுகளுக்கு ஏற்ப கலரை மாற்றி பெயிண்டிங் பண்ண சொன்னார்கள்.

ஓவியர்களும் அதற்கேற்றார் போன்று வரைந்து கொடுத்தார்கள். அதன்பிறகு இந்த ஓவியம் வெளிநாடுகளிலும் பிரபலமாகியது.

தஞ்சாவூர் ஓவியம் மரச்சட்டத்திற்கு நடுவில் தான் வரைவார்கள். அதில் உள்ள உருவம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். முக்கால்வாசி ஓவியத்தை அதனை சுற்றியிருப்பது தான் ஆக்கிரமித்திருக்கும்.

 

இந்த ஓவியம் எல்லாராலும் விரும்பப்படுவதற்கு காரணம் இவர்கள் எந்த கடவுளின் உருவத்தை வரைந்தாலும் கொஞ்சம் குண்டாகத்தான் வரைவார்கள். அதுமட்டுமின்றி எந்த ஆண் உருவம் வரைந்தாலும் அதில் கொஞ்சம் பெண் உருவ சாயல் இருக்கும்.

 

தஞ்சாவூர் பெயிண்டிங்கில் பின்புறம் கரும்பச்சை மற்றும் கருமையான நீலம் அடர்த்தியான சிவப்பு கலர்களில் காணப்படும். அதில் உள்ள உருவங்கள் எல்லாமே புளு, மஞ்கள் மற்றும் பச்சை கலர்களில் காணப்படும்.

ஓவியத்தின் சுற்றுப்புறங்களில் நன்றாக அடர்த்தியாக வரையப்பட்டிருக்கும். அதனால் தான் இருட்டில் கூட ஓவியங்கள் பளிச்சென காணப்படும்.

அந்த காலத்தில் இந்த ஓவியங்களை இருட்டில் தீப்பந்தங்களுடன் பார்த்தால் நம்மை மயக்குவது போன்று தோன்றுமாம்.

 

அந்த காலங்களில் தஞ்சாவூர் பெயிண்டிங்கை பலா மரம் மற்றும் மாமரங்களின் பலகைகளில் தான் வரைந்துள்ளார்கள்.

அந்த பலகையில் புளியங்கொட்டையாக நன்றாக அரைத்து பூசி பள்ளங்கள் ஏதுமின்றி நன்றாக பூசி காய வைத்து அதற்கு மேல் இரண்டடுக்கு துணியை பொத்தி அதற்குமேல் கிளிஞ்சல்கள் பூசி அதன்பிறகு தான் பளிச்சென மாற்றிய பிறகுதான் பெயிண்டிங் வேலையை ஆரம்பிப்பார்கள்.

இந்த காலத்தில் தஞ்சாவூர் பெயிண்டிங் வரையும் குடும்பங்கள் இல்லை. அதனால் சாதாரண மலப்பலகைகளில் வரைகின்றனர். அதில் உபயோகப்படுத்தும் தொழில்யுக்திகள் நிறையவே மாறிவிட்டன.