IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் மர்மக் கொலைகள் – பொதுமக்கள் அச்சம்

0 25

தமிழகத்தில் சில மாதங்களாகவே அடுத்தடுத்து மர்மக்கொலைகள் நடப்பதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, நாமக்கல் உட்பட நேற்று ஒரேநாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக ரவுகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்களின் குற்ற சாட்டி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், இந்திரா நகரை சேர்ந்த 29 வயதான ஆனந்த் என்பவர் லாரி கிளீனராக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் உறவினரான ஸ்டீபன் (வயது 23) ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இருவரும் இரவில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 பைக்குகளில் 6 பேர் கும்பலாக வந்து ஆனந்திடம் வாய்த்தகராரில் ஈடுப்பட்டனர்.

இருதரப்பிலும் வாக்குவாதம் முற்றியதால் அக்கும்பல் பட்டாக்கத்தி போன்ற ஆயூதங்களால் ஸ்டீபன் மற்றும் ஆனந்த இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இருவரையும் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் புழலை சேர்ந்த ஒரு பெண் தன் கணவனுக்கு தோசையில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து தன் அக்கா மகனுடன் சேர்ந்து கழுத்தை நேரித்து கொலை செய்துள்னர். இந்த கொலை சம்பவத்தில் அக்கா மகனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மர்ம உறுப்பை அறுத்து கொலை

மதுரை சிட்டலாட்சி நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுபா (வயது 40). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன் ரஞ்சித்தின் மனைவி ஆட்டோ டிரைவர் பிரகாஷுடன் சென்றதாக தெரியவருகிறது.

இதனால் ரஞ்சித் கோமதி என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு பிரகாஷ் , பாப்ளி உட்பட 4 பேருடன் ரஞ்சித் வீட்டிற்கு சென்று கத்தியால் அவரின் மர்ம உறுப்பை அறுத்து சென்றனர்.

பின்னர் அக்கும்பல் அவரை சரமாறியாக வெட்டி சாய்த்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ரஞ்சித்தை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிர் இழந்தார்.

அமைச்சர் உதவியாளரின் உறவினர் கொலை

புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் தனி உதவியாளர் அன்பானந்தத்தின் உறவினர் வினோத் சக்கரவர்த்தி. இவர் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இந்தகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,

மர்மமான முறையில் தொழிலாளி கொலை

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவரது நண்பன் அருண்குமார் என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இதனால் கண்ணன் மற்றும் அவரது மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரியவருகிறது.
தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

கண்ணன் மனைவியுடன் அருண்குமார் அடிக்கடி பேசிவருவதை கண்ணன் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது பேச்சுவார்த்தை நிறுத்தியபாடு இல்லை. இதனிடைய கண்ணனின் மனைவி அருண் குமாருடன் ஏடிஎம் சென்டருக்கு சென்றதை கவனித்து கண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார்.

இதனை மனதில் வைத்து கொண்ட அருண்குமார் கண்ணனின் வீட்டிற்கு சுமார் இரவு 11.30 மணியளவில் தூக்கிக் கொண்டிருந்த கண்ணனை தலை மற்றும் கைகளில் சரமாறியாக வெட்டி விட்டு தப்பித்துச் சென்றார். உடனே வீட்டின் அருகில் இருந்தவர் கண்ணனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களாக சட்டம் ஒழுங்கு கெட்டு ரவுடிகளிடம் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 படுகொலைகள் நடந்துள்ளன. பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே ரவுடிகளுடன் கைகோர்த்து வேடிக்கை பார்ப்பது போல் அமைந்துள்ளது.

மாவட்ட அதிகாரிகளும் காவல்துறையினரும் ரவுடிகளின் அட்டகாசத்தை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்காவிடில் இன்னும் இதுபோன்ற கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துவிடும் என சமூக ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.